திருநெல்வேலி

நெல்லையில் தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

DIN

திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்குக்கு, கோட்டாட்சியர் மணீஷ் தலைமை வகித்துப் பேசினார். மாநகராட்சி உதவி ஆணையர் சுப்புலட்சுமி, சுகாதார அலுவலர் அரசகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் பார்த்தீபன், பாண்டியன் கிராம வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில், மாநகராட்சி உதவி பொறியாளர் சாந்தி, ஆராய்ச்சி செயல்திட்ட சுகாதார ஆய்வாளர் முத்துராமன், தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர், பரப்புரையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சாரதா கல்வியியல் கல்லூரி மாணவிகள், ஆலடி அருணா நர்ஸிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
தூய்மை இந்தியா இயக்கம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியை கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில், ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணி பிரதான சாலை வழியாக வந்து அரவிந்த் கண் மருத்துமனை அருகில் நிறைவடைந்தது. கருத்தரங்கு, பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் தூய்மை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. களவிளம்பர உதவி அலுவலர் போஸ்வெல்ஆசீர் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT