அணு மின்நிலைய நிதியில் வீடு கட்டும் திட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்: கூடங்குளம் நிர்வாகத்துக்கு கோரிக்கை

கூடங்குளம் அணு மின்நிலைய நிதியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் திட்டத்தில் பயனாளிகளுக்கு


கூடங்குளம் அணு மின்நிலைய நிதியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் திட்டத்தில் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மு.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 45 கிராம ஊராட்சிகளில் வீடற்ற ஏழைகள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுப்பதாக கூடங்குளம் அணு மின்நிலைய நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு வீடும் ரூ.3 லட்சம் செலவில் கட்டிக்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து பயனாளிகள் தாங்கள் குடியிருந்து வந்த குடிசை வீடுகளை இடித்துவிட்டு வீடுகளை கட்டி முடித்து நிலுவைத் தொகைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கடந்த ஓராண்டாக நிலுவைத் தொகையான சுமார் ரூ.30 கோடியை கூடங்குளம் அணு மின்நிலைய நிர்வாகத்திடமிருந்து பெற்றுத் தரவில்லை.
எனவே இது தொடர்பாக கூடங்குளம் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அணு மின்நிலையம் முன்பு டிசம்பர் 3-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com