தென்காசி அருகே ரூ. 27 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகேயுள்ள கடப்போகத்தியில், அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை


திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகேயுள்ள கடப்போகத்தியில், அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் அமைந்துள்ள கடப்போகத்தி கிராமத்தில் தனியார் கிரானைட், டைல்ஸ்கள் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ஒரு சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதை, தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் கடை நடத்திவரும் நானாராம் மகன் பிரகாஷ் (30) என்பவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தக் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ஜெய்சல்குமார் மற்றும் குற்றாலம் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம் என தெரிவித்த போலீஸார், இதுதொடர்பாக பிரகாஷ் மற்றும் கிடங்கு உரிமையாளரிடம் விசாரித்துவருகின்றனர். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவின் கீழ் வருவதால், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை பெற்ற பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com