வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

கடையநல்லூர் முப்புடாதி அம்மன்  கோயிலில் செப்.17இல் புஷ்பாஞ்சலி

DIN | Published: 12th September 2018 09:29 AM

கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி மஹோத்ஸவம் திங்கள்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது.
இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்யாகவாசனம் நடைபெற்றது. செப். 15இல் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியும், 16இல் அம்பாள் தங்க கவச அலங்கார வைபவமும், தொடர்ந்து சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. 
17இல் தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம், கும்பஜெபம், ஹோமம், திரவ்யாஹூதி, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து தலைக்காவுடையார் சாஸ்தா கோயிலிலிருந்து பால்குட, தீர்த்தக் குட ஊர்வலமும், அம்மனுக்கு சகல தீர்த்த அபிஷேகம், ரஜத சொர்ண அபிஷேகம், சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெறும். 
பிற்பகலில் மகேஷ்வர, அன்னபூரணி பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு புஷ்பாஞ்சலியும், அம்பாள் வீதியுலாவும் நடைபெறும். 16ஆம் தேதி நடைபெறும் சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 99651 69324 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கருத்தரங்கு


வண்ணார்பேட்டையில்  ரூ.1 லட்சம் பொருள்கள் திருட்டு

பாளை. பகுதியில் விபத்துகள்: காயமுற்ற இருவர் சாவு
உவரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மயங்கி விழுந்து சாவு


ஆலங்குளம் அருகே  கொலை வழக்கில் சமையல்காரர் கைது