திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

சாலை விபத்தில் முதியவர் சாவு

DIN | Published: 12th September 2018 09:39 AM

திருநெல்வேலியில் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருநெல்வேலி அருகே புதுப்பேட்டை சத்யாநகரைச் சேர்ந்தவர் தாஸ்பாண்டியன் (61). கூலித் தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி மகன் மாரி பாண்டியனுடன் (22) பைக்கில் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தாராம். பின்னர்,  பைக்கில் ஊருக்கு திரும்புகையில், சந்திப்பு மேம்பாலத்தில் சென்றபோது,  அவ்வழியாக வந்த வாகனம் பைக் மீது மோதியதாம்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தாஸ்பாண்டியன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். மாரிபாண்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

More from the section

இறக்குமதி மணலை பெற முன்பதிவு செய்யலாம்


கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்: வாசுதேவநல்லூரில் ஆட்சியர் ஆய்வு


தேவேந்திரகுல வேளாளர்களை தலித் என அடையாளப்படுத்தக் கூடாது

தமிழர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது