23 செப்டம்பர் 2018

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு

DIN | Published: 12th September 2018 09:39 AM

பாளையங்கோட்டையில் தேசிய பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை சார்பில் பிளாரன்ஸ் சுவான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, பள்ளி முதல்வர் ஜான்சன் தலைமை வகித்தார். பயிலரங்கில், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் எனும் தலைப்பில், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் செல்வின் சாமுவேல், பூச்சியியலும் சுற்றுச் சூழலும் எனும் தலைப்பில் பி.எம்.டி. கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கொம்பையா, மூலிகை மருத்துவம் எனும் தலைப்பில் டாக்டர் மைக்கேல்ஜெயராஜ்  ஆகியோர் பேசினர். தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் ஆர்.கே. ஜேக்கப், வள்ளியூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாதுசுந்தர்சிங், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் கோ. கணபதி சுப்பிரமணியன், பாக்கியநாதன், ரகுமான்கனி, பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் வரவேற்றார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிங்ஸ்லி சாலமோன் நன்றி கூறினார்.
 

More from the section

மாணவர்களின் திறன் மேம்பாடே வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே. சூரப்பா
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா
நெல்லையில் புத்தகத் திருவிழா தொடக்கம்
நெல்லையில் நாளை வன உயிரின வார விழா போட்டிகள்
மோடி பிறந்த நாள்: நெல்லையில் ரத்த தானம்