திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

DIN | Published: 12th September 2018 09:38 AM

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சிந்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில், சிவஞான சித்தியார் சுபக்கம் என்ற நூலுக்கு முனைவர் மீ.முருகலிங்கம் விளக்கம் அளித்தார். மாணவர் ஐயப்பன் குழுவினர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்தப் பயிற்சி வகுப்பு அக். 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

இறக்குமதி மணலை பெற முன்பதிவு செய்யலாம்


கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்: வாசுதேவநல்லூரில் ஆட்சியர் ஆய்வு


தேவேந்திரகுல வேளாளர்களை தலித் என அடையாளப்படுத்தக் கூடாது

தமிழர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது