வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

தென்காசி அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN | Published: 12th September 2018 09:29 AM

தென்காசி அருகே வாகனத் தணிக்கையில் 700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட உணவு தடுப்புப் பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தென்காசி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் தலா 50 கிலோ எடையுள்ள 14 மூட்டை ரேஷன் அரிசி கொண்டு சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து, சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார், ரேஷன் அரிசியை கடத்தியதாக தென்காசி ஆய்க்குடியை சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்தை(24) கைது செய்தனர். பறிமுதல் செய்த அரிசி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

More from the section

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சிவந்திப்பட்டி அருகே தீக்காயமுற்ற பெண் சாவு

நெல்லையில்  புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுகம்


நெல்லை குறுக்குத்துறையில் தாமிரவருணி புஷ்கரம் விழா நடத்த தடை

பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு