புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

நெல்லை மாவட்டத்தில் 14இல் அம்மா திட்ட முகாம்

DIN | Published: 12th September 2018 09:41 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வருகிற வெள்ளிக்கிழமை (செப்.14) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐந்தாம் கட்ட அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும்  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி திருநெல்வேலி வட்டம் அனந்தகிருஷ்ணாபுரம், ராதாபுரம் வட்டம் செளந்திரபாண்டிபுரம், அம்பாசமுத்திரம் வட்டம் ஆழ்வார்குறிச்சி, நான்குனேரி வட்டம் அரியக்குளம், சேரன்மகாதேவி வட்டம் வடக்கு அரியநாயகிபுரம், பாளையங்கோட்டை வட்டம் கீழத்திருவேங்கடநாதபுரம், மானூர் வட்டம் களக்குடி, சங்கரன்கோவில் வட்டம் வெள்ளாளன்குளம், திருவேங்கடம் வட்டம் அழகாபுரி, செங்கோட்டை வட்டம் பிரானூர், வீரகேரளம்புதூர் வட்டம் ராஜகோபாலபேரி, ஆலங்குளம் வட்டம் மாயமான்குறிச்சி, சிவகிரி வட்டம் தாருகாபுரம், கடையநல்லூர் வட்டம் நகரம், திசையன்விளை வட்டம் முதுமொத்தான்மொழி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. 
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம் முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தாமிரவருணி புஷ்கர விழா ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் கோரிக்கை
ஐஏஎஸ் தேர்வுக்குப் பயிற்சி: மீனவ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
நெல்லை நகரம், பேட்டை பகுதிகளில் செப்டம்பர் 27 மின்தடை
சக மனிதர்கள் மீது அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக இருக்க முடியாது: எழுத்தாளர் வண்ணதாசன்


நெல்லையில் குடிநீர்க் குழாய் சீரமைப்புப் பணிகள் தீவிரம்