திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

பாளை.யில் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 09:38 AM

பாளையங்கோட்டையில் தமிழ் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாரல் இலக்கிய அமைப்பின் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் கிருஷி தலைமை வகித்தார். வத்தலகுண்டு கவிஞர் சக்திஜோதி எழுதிய "சங்கப் பெண் கவிதைகள்' என்ற நூல் குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அ. ராமசாமி,  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் ஜிதேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் வரவேற்றார். நூலகர் அ. முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

More from the section

இறக்குமதி மணலை பெற முன்பதிவு செய்யலாம்


கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்: வாசுதேவநல்லூரில் ஆட்சியர் ஆய்வு

தமிழர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது
தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின் மாநாடு