செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

மாசு கலந்த குடிநீர் விநியோகம்: பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

DIN | Published: 12th September 2018 09:38 AM

நான்குனேரி ஒன்றியம், அரியகுளம் ஊராட்சியில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்த ஊராட்சிப் பணியாளர்கள் இருவரை தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டியை முறையாக பராமரித்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நான்குனேரி ஒன்றியம் அரியகுளம் ஊராட்சியில் சேதமடைந்து மேற்கூரை உடைந்து திறந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்ததாக தெரியவந்தது.
குடிநீர்த் தொட்டியின் மேற்கூரை சேதமடைந்திருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்த ஊராட்சியின் செயலர் பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்ணன், நீர்த் தேக்கத் தொட்டியை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாடசாமி ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section


"தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி நெல்லையில் நவ.30 இல் உண்ணாவிரதம்' 

கொசுப்புழு உற்பத்தி:  அரசு மருத்துவமனை, பள்ளிக்கு அபராதம்
கஜா புயல்: தயார் நிலையில் பேரிடர் மேலாண்மைக் குழு: நிர்வாக ஆணையர்
பாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்
மேலகரத்தில் சிறப்பு வழிபாடு