பாலம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல் முயற்சி

பாலம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பாலம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனர்.
திருநெல்வேலி-சேரன்மகாதேவி பிரதான சாலையில், அரசடி விநாயகர் கோயில் அருகே சேதமடைந்த கால்வாய் பாலத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அங்கு பாலம் கட்டும் பணியை தொடங்கினால், ஐப்பசி மாதத்தில் திருநெல்வேலி காட்சி மண்டபத்தில் நடைபெறும் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கும், வேணுவன குமாரர் கோயில் கந்தசஷ்டி விழாவுக்கும் இடையூறு ஏற்படும். எனவே, இந்த விழாக்கள் முடிந்த பிறகு பாலப் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, பக்தர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
எனினும், செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பாலத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுமக்கள், பக்தர்கள் அங்கு திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோயில் விழாக்கள் முடிந்தபிறகு பாலம் கட்டும் பணி நடைபெறும் என உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். பாலத்தை இடிக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com