ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்.) சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்.) சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும். சம்பள நிர்ணயத்தை 3.7 சதவிகிதமாக்க வேண்டும். லார்ஜஸ் திட்டத்தில் குழந்தைகளுக்கு வேலை வழங்க வேண்டும். வருமானவரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் ரிஸ்க் உரிய படிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு கெளரவ ஆலோசகர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் பழனி, செயலர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் காளிமுத்து, சங்க உறுப்பினர்கள் ராஜ், ஆத்தியப்பன், அந்தோணிராஜ், கந்தசாமி, தங்கசாமி, பலவேசம், பிரிட்டோ, ஆறுமுகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com