அக். 4-ல் ஒட்டுமொத்த விடுப்பு: ஜாக்டோ-ஜியோ முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 4-ம் தேதி ஒட்டுமொத்த அளவில் தற்செயல் விடுப்பு எடுப்பது என

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 4-ம் தேதி ஒட்டுமொத்த அளவில் தற்செயல் விடுப்பு எடுப்பது என ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் செ. பால்ராஜ், வீ. பார்த்தசாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். பகவதிப்பபிள்ளை, கனகராஜ், பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் ஜி. கங்காதரன் வரவேற்றார்.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சோ. முருகேசன், ந. குமாரவேல், மூட்டா முருகேசன், டி. கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள் குறித்து இம்மாதம் 23 முதல் 28 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்கள், ஆசிரியர்களின் இல்லங்களுக்குச் சென்று பிரசாரம் செய்வது. வரும் அக்டோபர் 4-ம் தேதி ஒட்டுமொத்த அளவில் தற்செயல் விடுப்பு எடுப்பது. அக்டோபர் 23 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநில மாநாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது. நவம்பர் 27 ஆம் தேதி முதல் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. க. துரைசிங் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com