பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அடிக்கல்

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் நன்னடத்தை கைதிகளுக்கு விவசாயம், உணவு விடுதி போன்றவற்றில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை புழல் சிறை உள்பட 9 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களைத் திறக்கவும், அவற்றில் நன்னடத்தை கைதிகளுக்கு பணி வழங்கவும் சிறைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவர் தா. பழனி அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரை மண்டல முதன்மை விற்பனை மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சி. கிருஷ்ணகுமார் கூறியது:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்பட 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நன்னடத்தை கைதிகளுக்கு சிறைஅங்காடி, விவசாய பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காகித பைகள், உணவுப் பலகாரங்கள் போன்றவற்றை தயார்செய்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் ரூ. 2 கோடியில் புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 100 நாள்களில் இப்பணிகள் முடியும் வாய்ப்புள்ளது. இதன்மூலம், 35 நன்னடத்தை கைதிகள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com