பாளை.யில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (செப். 22) தொடங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (செப். 22) தொடங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனர் வீரபாலன், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பே. ராஜேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது:
திருநெல்வேலியில் மூன்றாவது ஆண்டாக மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், புத்தகத் திருவிழா சனிக்கிழமை (செப். 22) மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை செல்வி திருமண மஹாலில் தொடங்குகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தொடங்கி வைக்கிறார். 50 அரங்குகளில், 5 லட்சம் தலைப்புகளில், 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி புத்தகங்களும், கல்வித்துறை சி.டி.க்களும் இடம்பெற உள்ளன. 
தி.க.சி. அரங்கத்தில் தினமும் மாலை 5 மணிக்கு நூல் விமர்சனமும், எழுத்தாளர்களின் சிறப்புரைகளும் நடைபெற உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இம்மாதம் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. 
என்னைச் செதுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் மாணவர், மாணவிகள் பேசவேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து 3 பேர் மட்டுமே முதல்வரின் கையொப்பத்துடன் பங்கேற்க வேண்டும். 7 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் கற்பனை ஆற்றலை மேம்படுத்த கதை சொல்லும் நிகழ்வு தினமும் மாலை இலக்கிய அரங்கில் நடைபெற உள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com