சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் புளியரை ராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் குருசாமி, நிர்வாகத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் செந்தில் ஆறுமுகம், துணைப் பொதுச் செயலர் திருநாவுக்கரசு, மண்டல செயலர் சுப்பு மாணிக்கவாசகம், துணைத் தலைவர் வீரபாகு, கே.டி.சி. நகர் கிளைச் சங்கம் அய்யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் கணபதியப்பன் வரவேற்றார். மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆட்சிமன்றக் குழுச் செயலர் செல்லையா வ.உ.சி.யின் படத்தை திறந்து வைத்தார். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கனகசபாபதி, இருதயவியல் மருத்துவ நிபுணர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இளைய பாரதம் என்ற தலைப்பில் ராஜராஜனும், மகளிர் நலம் என்ற தலைப்பில் பேராசிரியை சொர்ணலதாவும் சொற்பொழிவாற்றினர். பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தீர்மானங்கள்: இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரங்கள் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். கல்வி, நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்லா மாவட்ட தலைமை இடங்களிலும் கல்வி மையம் அமைக்க வேண்டும். சைவ வேளாளர் சமுதாயத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com