டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்: வாசுதேவநல்லூரில் ஆட்சியர் ஆய்வு

வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவரும் டெங்கு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவரும் டெங்கு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பத்திரகாளியம்மன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு பேரூராட்சிகளைச் சேர்ந்த 118 டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் 120 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு வார்டுகள்தோறும் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
பேரூராட்சியின் 5, 12 ஆவது வார்டுகளைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று, அங்கு வசிப்பவர்களிடம் சுகாதாரம் பேணும் முறைகள் குறித்து விளக்கினார். 
வீடுகளில் சேர்த்து வைத்துள்ள குடிநீரில் குளோரின் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். பிறகு, டெங்குவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த ஆட்சியர், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு, டி.டி.டி.ஏ. ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.
அவருடன், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், சிவகிரி வட்டாட்சியர் செல்வசுந்தரி, வாசுதேவநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் கே. சாந்தி சரவணபாய், உதவி செயற்பொறியாளர் ஜோதிமுருகன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சு. லெனின் (வாசுதேவநல்லூர்), க. வெங்கடகோபு (ராயகிரி), வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com