தமிழர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது

தமிழர்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

தமிழர்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
மதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ.நிஜாம் இல்லத் திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர் மேலும் கூறியது: ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில் முன்னாள் நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். தாமிர அடர்த்தி கசடுகளால் தூத்துக்குடியில் நீர், நிலம் மாசுபட்டுள்ளது. புற்றுநோய், நுரையீரல் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
வண்டல்மண் மற்றும் செம்மண்ணை கசடுகள் மீது கொட்டி மூடி மறைத்துள்ளனர். பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம்கூட இல்லை. பசுமைத் தீர்ப்பாயம் அடுத்தகட்டமாக நடத்தவுள்ள விசாரணையின்போது நானும் ஆஜராகி எனது கருத்துகளைத் தெரிவிப்பேன்.
தமிழக அரசு மத்திய அரசிடம் அடிப்படை பிரச்னைகளை எடுத்துக் கூறி தீர்க்க வல்லதாக இல்லாமல், உரிமைகளை இழந்து நிற்பதாக உள்ளது. கர்நாடகத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. மத்திய அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும், மறைமுகமாக பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவொரு சமயத்தின் நம்பிக்கையிலும் அரசுகள் தலையிடக்கூடாது. இக்கட்டான சூழல்களில் மட்டுமே அவசர சட்டங்களை உருவாக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. 
ஹிந்துத்துவத்தைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். தமிழகத்தில் மதச்சார்பின்மையே அடித்தளமாக விளங்கி வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காயிதேமில்லத் ஆகியோர் சமத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர். தமிழகத்தில் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றார் அவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com