நெல்லை காய்கனி சந்தைகளுக்கு சீனிக்கிழங்குகள் வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு சீனிக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு சீனிக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து மார்ச் மாதம் வரை கிழங்குகள் அறுவடை அதிகம் நடைபெறும். மரவள்ளிக்கிழங்கு, சிறுகிழங்கு, சீனிக்கிழங்கு, பனங்கிழங்கு ஆகியவை இம் மாவட்டங்களில் அதிகம் விளைகிறது. நிகழாண்டில் சீனிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கிலோ ரூ.30 வரை விற்பனையான நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.  உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு): 
கத்தரிக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, தக்காளி-ரூ.10, அவரை-ரூ.22, கொத்தவரை-ரூ.38, புடலங்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.20, சுரைக்காய்-ரூ.10, பாகற்காய்-ரூ.40, மாங்காய்- ரூ.50, முருங்கைக்காய்- ரூ.45, பச்சைமிளகாய்- ரூ.30, வாழைக்காய்- ரூ.20, தடியங்காய்-ரூ.12, பூசணிக்காய்-ரூ.12, தேங்காய்-ரூ.38, வெள்ளரிக்காய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.12, பல்லாரி- ரூ.14, சின்னவெங்காயம்-ரூ.28, சேனைக்கிழங்கு-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.28, சேம்புக்கிழங்கு-ரூ.30, மரவள்ளி கிழங்கு-ரூ.16, சீனிக்கிழங்கு-ரூ.15, எலுமிச்சை-ரூ.35,  தண்டுகீரை- ரூ.10, அரைக்கீரை-ரூ.10, குத்துப்பசலைகீரை-ரூ.10, மணத்தக்காளிகீரை- ரூ.20, கொத்தமல்லி கீரை-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.21, கேரட்-ரூ.20, பீட்ரூட்-ரூ.18, செளசெள-ரூ.22, ரிங் பீன்ஸ்-ரூ.50, இஞ்சி-ரூ.88, நெல்லிக்காய்-ரூ.34, வாழைப்பழம்- ரூ.60, நூல்கோல்-ரூ.55.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com