சிறப்பு நிதியுதவித் திட்ட பதிவேற்றப் பணிகள்: நெல்லையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு நிதியுதவித் திட்டப் பதிவேற்றப் பணிகளை தமிழக  சிறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு நிதியுதவித் திட்டப் பதிவேற்றப் பணிகளை தமிழக  சிறப்பு நிதியுதவித் திட்ட கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு நிதியுதவித் திட்ட பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதை கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சங்கர்நகர் பேரூராட்சி ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர், கிரண்குரல்லா கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள நபர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அவர்களின் வங்கிக் கணக்குகளையும், அவர்கள் தகுதியான நபர்களா என்பதையும் கள ஆய்வு மேற்கொண்டு, அதனை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மற்றும் சங்கர்நகர் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பதிவேற்றப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துப் பணிகளும் முறையாக, வேகமாக நடைபெற்று வருவது ஆய்வில் தெரியவந்தது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது, திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே, மாநகராட்சி ஆணையர் நாராயணன் நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின்அபுபக்கர், மகளிர் திட்ட அலுவலர் அந்தோணி பெர்னாண்டோ, மாநகராட்சி நகர் நல அலுவலர் சத்தீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com