பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.  
"15 சதவீத  ஊதிய பலனுடன் 3ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்; பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும்; 2ஆவது ஊதிய மாற்றத்தில் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள்களுக்கு இப்போராட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்ததால், வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வெறிச்சோடியது. மேலும், சங்கத்தின் மாவட்டச் செயலர் சூசை மரிய அந்தோணி தலைமையில் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com