மார்ச் 10இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வரும் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,63,392 குழந்தைகள் பயனடைவார்கள்.

வரும் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,63,392 குழந்தைகள் பயனடைவார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,63,392 குழந்தைகள் பயனடைவார்கள். 
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 1,705 மையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் 5 வயதுக்குள்பட்ட சுமார் 2.63 லட்சம் குழந்தைகளுக்கு  தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட  குழந்தைகளுக்கு பின்வரும் 2 நாள்கள் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்குவர்.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் அவர்களுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மையங்களில் மருத்துவத் துறையைச் சேர்ந்த 1,200 பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் 306 பேர், சத்துணவுப் பணியாளர்கள் 3,655 பேர், ரோட்டரி குழுவைச் சேர்ந்த 30 பேர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 2,255 பேர் என மொத்தம்  6,979 பேர் பணியாற்றவுள்ளனர்.
இந்த முகாமை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com