தாமிரவருணி-கருமேனி ஆறு-நம்பியாறு இணைப்பு: ரூ.216.37 கோடியில் 3ஆம் கட்டப் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு வெள்ளநீர்க் கால்வாய் திட்டத்தின் 

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு வெள்ளநீர்க் கால்வாய் திட்டத்தின் 3ஆம் கட்டப் பணி வள்ளியூர் அருகேயுள்ள கோவன்குளத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு வெள்ளநீர்க் கால்வாய் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.369 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் மற்றும் 2ஆம் கட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் 3ஆம் கட்டப்பணிகள் தொடங்க ரூ.216.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தத் திட்டப் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.  இதைத் தொடர்ந்து, கால்வாய் பணி தொடக்க நிகழ்ச்சி வள்ளியூர் அருகேயுள்ள கோவன்குளம் நம்பியாற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி,   ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ ஆகியோர் திட்டப் பணியைத் தொடங்கிவைத்தனர்.
பின்னர்,  எம்எல்ஏ கூறியது: இத்திட்டம் ஒரு நிலைக்கு 19 தொகுப்புகள் வீதம் நான்கு நிலைகளில் செயல்படுத்த திட்டம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளநீர்க் கால்வாய் திட்டம் நிறைவுபெறும் நிலையில் திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 17.002 ஹெக்டேர் நிலங்கள் புதிய பாசன வசதி பெறும்; 23.040 ஹெக்டேர் பாசனம் உறுதிபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com