திருநெல்வேலி

"பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை மாற்ற வேண்டும்'

DIN

பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கழகத்தின் மாவட்டச் செயலர் பாபு செல்வன், மாவட்டத் தலைவர் ஆர்.முருகன் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
நிகழாண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையமாக ராம்நகர் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். சங்கரன்கோவில் மற்றும் செட்டிகுளம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் இந்த மையத்திற்கு வருவதற்கு சிரமம் ஏற்படும். எனவே, போக்குவரத்து வசதி உள்ள பள்ளியை மதிப்பீட்டு மையமாக தேர்வு செய்ய வேண்டும். 
இந்த பொதுத்தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்கள் பணியிடத்திற்கு  மண்டலம் வாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் போது அந்த மண்டலத்திற்குறிய ஆசிரியர்கள் போக மீதம் உள்ள பணியிடங்களுக்கு பிற மண்டல ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யவேண்டும். தேர்வுப்பணிக்கான துறை அலுவலர் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிக்கான முதன்மை தேர்வாளர், கூரிந்தாய்வாளர், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் போன்ற பணிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் எனக் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT