பட்டாசு ஆலை விபத்துபலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு: ஆலை உரிமையாளர் கைது

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
வெடி விபத்து தொடர்பாக, பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவேங்கடம் வட்டம், வரகனூரை அடுத்த குகன்பாறையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அய்யாச்சாமி (42) என்பவர் நடத்தி வந்த பட்டாசு ஆலையில், வெள்ளிக்கிழமை(பிப். 22) மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. அதில், வரகனூரைச் சேர்ந்த மாரியம்மாள், பெரியகிருஷ்ணம்மாள், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கஸ்தூரி, திருத்தங்கல்லைச் சேர்ந்த நீதிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்தில் காயமடைந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சிவகாசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். அதில், திருத்தங்கல்லைச் சேர்ந்த பெரியசாமி (40) என்பவர்,  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார். இதையடுத்து, விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விதிமீறல் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையின் உரிமையாளரான  அய்யாச்சாமியை திருவேங்கடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com