பாளை. சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு, சிறுகிழங்கு: பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட கரும்பு மற்றும் சிறுகிழங்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட கரும்பு மற்றும் சிறுகிழங்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு, கைதிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை உரங்கள் மூலம் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் சிறையில் கைதிகளின் உணவுக்கு வழங்கப்படுவதோடு, சிறைவாசலில் உள்ள அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு முதல்முறையாக பொங்கல் பண்டிகையை கருத்தில்கொண்டு கரும்பு மற்றும் சிறுகிழங்கு பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை அறுவடை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டுகளில் ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சிறை வளாகத்தில் விளைந்த கரும்பு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com