மாட்டுப் பொங்கல்: உற்சாக கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.  கிராமப் பகுதிகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
உழவுக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா புதன்கிழமை  கொண்டாடப்பட்டது.   கால்நடைகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணங்களைப் பூசி, தோட்டம், மாட்டுத்தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.   பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில்,  பசுக்களின் முன்பு பெண்கள் பொங்கலிட்டனர்.  அதன்பின்பு கோ பூஜை நடத்தப்பட்டது.  விழாவில் பங்கேற்ற கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.  
அருகன்குளம்  அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலையில் மாட்டுப்பொங்கலையொட்டி கோசாலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் பொங்கலிட்டனர்.  நண்பகலில் பசுக்களுக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும் காய்கனிகள், பழங்கள், கரும்புகள், பக்தர்களின் பொங்கல் ஆகியவை பசுக்களுக்கு வழங்கப்பட்டன.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி: பாளையங்கோட்டை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் மாட்டுப்பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா தலைமை வகித்தார். ஐ.ஏ.ஆர்.எப். தலைவர் பி.டி.சிதம்பரம்,  அந்தோணி குரூஸ் அடிகளார், லிட்டில் பிளவர் கல்வி குழுமத் தலைவர் அ.மரியசூசை,  கம்பன் இலக்கியச் சங்க பொருளாளர் எம்.ஏ.நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவப்பிகாசர் நற்பணி மன்றச் செயலர் கோ.கணபதி சுப்பிரமணி யன் வரவேற்றார். நிர்மலானந்த மகராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பயிற்சி ஆட்சியர் சுகபுத்திரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். விழாவில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.  அதைத்தொடர்ந்து கோ பூஜை, பஜனை, கிருஷ்ணர் வழிபாடு நடைபெற்றது. யதீஸ்வரி தவபிரியா,  யதீஸ்வரி நீலகண்ட பிரியா, யதீஸ்வரி துர்கா பிரியா ஆகியோர் பஜனை பாடல்கள் பாடினர். கல்லூரி கல்வி ஆலோசகர் பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com