திருநெல்வேலி

நெல்லையில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

DIN


திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள். அதன் பிறகு வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் முதல்வர் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனை பகுதியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றுப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, கடம்பூர் செ.ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் நிகழ்ச்சியை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் சுமார் 16 கி.மீ. சுற்றளவுக்கு கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கேடிசி நகரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் முதல்வரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT