முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குச்சீட்டு படிவம்தேவை: தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர்கள் மனு

ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குச்சீட்டு படிவங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குச்சீட்டு படிவங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப் பணியில் 1 லட்சத்து 97 ஆயிரம் பெண்கள் உள்பட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் ஆசிரியைகள் பணிபுரியும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அருகேயுள்ள தொகுதிக்குள் மட்டுமே பணியாணை வழங்க வேண்டுகிறோம். தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களையும், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்.
வாக்குச்சீட்டு படிவங்கள்: 2016 சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு படிவங்களை வழங்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் முழுமனதுடன் தேர்தல் பணி புரிகிறோம். ஆனால், தற்போது உள்ள விலைவாசி உயர்வு, போக்குவரத்து செலவு, உணவு செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் மதிப்பூதியம் மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, இப்போது உள்ள விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, பெறும் மொத்த ஊதியத்தில் 10 சதவீதம் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com