சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

சங்கரன்கோவிலில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர்  சிவபத்மநாபன் தலைமை வகித்தார்.  முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, தொழிலதிபர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.சுப்பையா, தலைமைத் தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன்,  நகர காங்கிரஸ்  தலைவர் உமாசங்கர், இந்நதிய கம்யூனிஸ்ட் வட்டாரச்  செயலர் எம்.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் தனுஷ்.எம்.குமார் பேசியது:  தேர்தலில் வெற்றி பெற்றால், இத் தொகுதியில் நீண்டநாள்கள் நிறைவேறாமல் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார் அவர்.
 கூட்டத்தில் முன்னாள் நகரச் செயலர் ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர் கணேசன், வர்த்தக அணிச் செயலர் அண்ணாவியப்பன், வழக்குரைஞர் முத்துராமலிங்கம், இளைஞரணி பிரகாஷ், ராம்சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். நகரச் செயலர் சங்கரன் நன்றி கூறினார்.
புளியங்குடி: புளியங்குடியில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் அனைத்து சமுதாய நிர்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
   தொடர்ந்து,  அவர் புளியங்குடி திமுக நகரச் செயலர்  செல்வகுமார்,  மதிமுக நகரச் செயலர் ஜாகிர் உசேன், இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட்  நிர்வாகிகள்,  மமக  நகரத் தலைவர் பஷீர் ஒலி,  காங்கிரஸ் நகரத் தலைவர் பால்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், நகரத் தலைவர் அப்துல்வகாப் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது:   நான் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், தென்காசி தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தொகுதியின் அனைத்து பகுதி மக்களைச் சந்தித்து கோரிக்கைகளை  நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்அவர்.
பேட்டியின்போது திமுக நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன்,  மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டி, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் இக்பால், இளைஞரணி மாநில துணைத் தலைவர் செய்யது பட்டாணி உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com