பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கணினி அறிவியலின் தற்கால வளர்ச்சிகளும் போக்குகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணினி அறிவியலின் தற்கால வளர்ச்சிகளும் போக்குகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதுகலை மற்றும் ஆய்வுக் கணினி அறிவியல் துறையின் சார்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மு. முகம்மது சாதிக்  தொடக்கவுரையாற்றினார்.  கல்லூரியின் அரசு உதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் வாழ்த்திப் பேசினார்.  முதுகலை மற்றும் கணினி அறிவியல் ஆய்வுத் துறைத் தலைவர் எஸ். ஷாஜுன் நிஷா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித் துறைப் பேராசிரியர் அத்தர் அலி கான் ஆர்-மொழியில் நிரலாக்கம் எனும் தலைப்பிலும்,  இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணிப்பொறித் துறைப் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமணியன் நிழற்பட அறிதலில் இயந்திரக் கற்றல் எனும் தலைப்பிலும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணிப்பொறித் துறைப் பேராசிரியர் பார்த்தா பிரட்டிம் ராய் மாதிரி வகை அறிதல் மற்றும் அதன் பயன்பாடுகள் எனும் தலைப்பிலும்  சிறப்புரையாற்றினர்.
ஏற்பாடுகளை முதுகலை கணினி அறிவியல் துறைப் பேராசிரியர்கள் ரோஸ்லின்,  பிரமு கைலாசம், முகம்மது ரியாசுதீன் மற்றும் ஆய்வக பொறுப்பாளர் ஜெனுபா ஆகியோர் செய்திருந்தனர்.
 பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் முதுகலை மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியை பிரமு கைலாசம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com