"குறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டுதிட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில்

தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக அரசு புதியதாக புத்தாக்க பற்றுச்சீட்டு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இந்தத் திட்டம் 400 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு ஆண்டுதோறும் ரூ. 20 கோடி வரவு செலவு திட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஆண்டு 2018-19 முதல் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு திறனை அதிகரிக்கவும், புதுமையான தயாரிப்புகள் வணிக ரீதியாக செயல்படுத்தக் கூடியதாகும். விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்புகளில் விழிப்புணர்வு மற்றும் பங்கு பெறுதலை அதிகரித்தல், தொழில்துறை, கல்வியியல் மற்றும் அரசு ஆகியவற்றிற்கு இடையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் நிலைப்படுத்துதல் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் தொழில் மற்றும் வணிக துறை இணையதளம் W​W​W.​I​N​D​C​O​M.​T​N.​G​O​V.​I​N/​I​VP     மூலம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, வழிகாட்டு குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும். 
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலை சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளாரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com