கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் ஆய்வு திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள்


கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் ஆய்வு திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்டோர் சில தினங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சை நிபுணர் அமித்லத்வால், கேரள மாநிலம் சாலக்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவதாஸ், உலக சுகாதார மைய ஆலோசகர் அன்கூர்சூடன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை தனது ஆய்வை தொடங்கினர்.
ஆய்வுக்குழுவினர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நிர்வாக அலுவலகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் தொடரும். முன்னதாக, ஆய்வுக் குழுவினரை மருத்துவ நலப் பணி இணை இயக்குநர் பரிதாசெரீன் தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (சுகாதாரப் பணி), யமுனா (தொழுநோய்), சுந்தரலிங்கம் (காசநோய்), பத்மநாபபுரம் அரசு மருத்துவர் ரியாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சேவைகள் குறித்தும், இயங்கி வரும் பிரிவுகள், எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து, தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வு செய்ய வந்துள்ள தர மதிப்பீட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com