தூத்துக்குடி

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி ,கோவில்பட்டியில் பிஎஸ்என்எல்  ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும்;  பிஎஸ்என்எல் நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஊழியர்கள் தரப்பின் கோரிக்கையை ஆலோசிக்கவும் உடனடியாக உயர்மட்ட குழுவை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் தலைமை மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ்,  பட்டுக்குமார் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் ஜெயமுருகன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி:  பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.  செயலர் பாலசிங், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் சுந்தர்ராஜ், செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அமைப்புச் செயலர்கள் பாலகிருஷ்ணன், பரமசிவன், ஒப்பந்த ஊழியர் சங்கப் பொருளாளர் ஜாகிர்உசேன், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், அமைப்புச் செயலர்கள் ரஜினிகுமார், சீனிவாசகன், முருகன், பேராச்சி செல்வம், தணிக்கையாளர் ஹரி, துணைச் செயலர் மாணிக்கராஜ், துணைப் பொருளாளர் தங்கமாரியப்பன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT