"கஜா புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு'

கஜா புயலால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்காதவகையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள்

கஜா புயலால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்காதவகையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக, மாவட்டத்துக்கான பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலரான கைத்தறித்துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குமார் ஜெயந்த் கலந்துகொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கஜா புயல் வியாழக்கிழமை (நவம்பர் 15) மாலைதான் கரையைக் கடக்கவுள்ளது. மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. புயலால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையை உடனே மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com