சாத்தான்குளத்தில் பருப்பு, உளுந்து, தானிய வகைகள் திடீர் விலை உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பருப்பு, உளுந்து மற்றும் தானிய வகைகள் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பருப்பு, உளுந்து மற்றும் தானிய வகைகள் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
உளுந்து, துவரம்பருப்பு, கடலைபருப்பு, தொலிபருப்பு, மல்லி, நல்லெண்ணெய் உள்ளிட்டவை, சாத்தான்குளம் பகுதியில் திடீரென விலை உயர்ந்துள்ளது. 
வழக்கமாக தீபாவளி பண்டிகைக் காலங்களில் இந்த விலை உயர்வு இருக்கும். ஆனால் நிகழாண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில் கடலைபருப்பு, உளுந்து, துவரம் பருப்பு விலை உயரவில்லை. தீபாவளி முடிந்த பிறகு ஒரே நாளில் மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ரூ. 7ஆயிரமாக இருந்த நம்பர் 1 உருட்டு உளுந்து தற்போது ரூ. 8,500 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 7ஆயிரமாக இருந்த துவரம்பருப்பு, ரூ. 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரூ.5,800ஆக இருந்த தொலி பருப்பு ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளது. 40 கிலோ மல்லி ரூ.2,400 லிருந்து ரூ.2,800 ஆக உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ரூ.190 ஆக இருந்த நல்லெண்ணெய் ரூ.290ஆக உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு இந்த திடீர் விலையேற்றம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 
இதுகுறித்து மளிகைக் கடை வியாபாரிகள் மற்றும் மொத்த நவதானிய விற்பனையாளர்களிடம் கேட்டபோது: பொதுவாக தசராவிலிருந்து தீபாவளி வரை எண்ணெய், பருப்பு விலைகள் சிறிது உயரும். பின்னர் படிப்படியாக குறைந்து டிசம்பரில் சராசரியான விலைக்கு வந்துவிடும். புதிய பருப்புகள் வரத்தொடங்கிவிடும். ஆனால் நிகழாண்டு தீபாவளி நேரத்தில் விலை ஏற்றமில்லை. ஆனால் தற்போது திடீரென பருப்பு விலையேற்றம் ஏற்பட்டது. செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நல்லெண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.
அரசு வெளிநாட்டிலிருந்து பருப்பு இறக்குமதிக்கும் வரியை உயர்த்தி உள்ளதால் வெளிநாட்டு பருப்பு இறக்குமதியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com