தூத்துக்குடி

மின்வாரிய ஒப்பந்த  தொழிலாளர்கள் போராட்டம்

DIN

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தின்படி தினக்கூலி ரூ. 380 வழங்க வேண்டும்; மின்வாரியத்தில் காலியாக உள்ள 45,500 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, திட்டச் செயலர் ரவிதாகூர் தலைமை வகித்தார்.
சிஐடியூ மாநிலச் செயலர் ஆர். ரசல், மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் வை. பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலர் அப்பாத்துரை, மண்டல செயலர் பீர்முகமதுஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தர்னாவில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT