கஜா புயல்: தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் நாகை பயணம்

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிகள் மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சிப் பணியாளர்கள் 

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிகள் மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சிப் பணியாளர்கள் 57 பேர் பேருந்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தனி பேருந்து மூலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அந்தக் குழுவில் 2 துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள், 40 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 15 மரம் வெட்டும் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: தற்போது செல்லும் குழுவினர் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் கடுமையான காற்றினால் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலான பணிகளை மேற்கொண்டு அங்கு இயல்பு நிலை திரும்பியதும் தூத்துக்குடிக்கு திரும்புவர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், அரி கணேசன், ராஜசேகர், ராஜபாண்டி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com