தூத்துக்குடியில் சர்வதேச பயிலரங்கம்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், சிறப்புக் கல்வியின் நவீன போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேச பயிலரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலின் சர்மிளா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள நியூ லீப்ஸ் அகாதெமி கலைத்திட்ட முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பியர்லின் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புக் கல்வியில் பல்வேறு நவீன போக்குகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில்,  கல்லூரி பேராசிரியர்கள்,  மாணவிகள் மற்றும்  தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் 47 சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.  பயிலரங்கின்போது,  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சிறப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும்,  கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் முரளிதரன் மற்றும் உதவிப் பேராசிரியர் தங்கசெல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com