தூத்துக்குடி

வனவர் பணி: தூத்துக்குடியில் இலவச மாதிரி தேர்வு

DIN

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் பணிக்கான இலவச மாதிரி தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழக அரசின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஏழை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாதெமியில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள வனகாப்பாளர் பணிக்கான 878 பணியிடங்களுக்கும், வனவர் பணிக்கான 300 பணியிடங்களுக்குமாக மொத்தம் 1178 பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு கின்ஸ் அகாதெமி சார்பில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்டப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, சனிக்கிழமை நடைபெற்ற மாதிரித் தேர்வில் 50 பேர் கலந்து கொண்டனர். கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர் ஏ. நாகராஜன் தேர்வுகளை நடத்தினார். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வீதம் தொடர்ந்து இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என கின்ஸ் அகாதெமி நிறுவனர் பேச்சிமுத்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT