18 நவம்பர் 2018

அனல்மின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு  உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

DIN | Published: 11th September 2018 08:08 AM

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அதற்குரிய இழப்பீட்டை முழுவதுமாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளுக்கு நிலங்களை வழங்கியவர்கள் கூட்டமைப்புக்  கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  அமைப்பாளர் ஆசாத் தலைமை வகித்தார். நாகராஜன், ஆறுமுகப்பாண்டி, கந்தப்பன், பிர்தவ்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் உடன்குடி அனல்மின் திட்டம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன.   கட்டுமானப் பணிகள்,  நிலக்கரி கையாளும் துறைமு கப்பகுதிகளிலும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளையொட்டி அப்பகுதியில் உள்ள 72 பேரின் நிலங்களை கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை நான்கு தவணைகளாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிக்கப்பட்டது.ஆனால் முதல் தவணை மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மீதியுள்ள மூன்று தவணைகள் வழங்கப்படவில்லையாம்.   இதையொட்டி நிலம் வழங்கியவர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மீதியுள்ள மூன்று தவணைகளையும்  வழங்க வலியுறுத்தப்பட்டது.இதில் மருத்துவர்சுப்பிரமணியன்,லூக்காஸ்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More from the section

"மக்கள் நீதிக் கொற்றம்' - புதிய அமைப்பு தொடக்கம்
கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்


வனவர் பணி: தூத்துக்குடியில் இலவச மாதிரி தேர்வு

பயன்படுத்தாத நிலையில் உள்ள இலவச வீடுகளை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை:  ஆட்சியர்
தூத்துக்குடியில் சர்வதேச பயிலரங்கம்