சனிக்கிழமை 17 நவம்பர் 2018

கல்வி உதவித்தொகை அளிப்பு

DIN | Published: 11th September 2018 08:07 AM

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு, நிர்வாகஸ்தர்
க.மெய்கண்டமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜி.வேலாயுதம் முன்னிலை வகித்தார்.  சாத்தான்குளம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.பி.சங்கர் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு விருது மற்றும் கல்வித்தொகையை வழங்கினார். 
நிகழ்ச்சியில் செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் ச.மா.கார்க்கி,  சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகஸ்தர்கள் டி.ஞானசுந்தரம், எஸ்.லட்சுமணன், எஸ்.இசக்கிமுத்து, வி.பேச்சிமுத்து, பி.வி.பொன்முருகேசன், முன்னாள் நிர்வாகஸ்தர்கள்
ச.குமார், ஆ.வேல்மணி,  கணக்கர்கள் தி.சடகோபால், சி.முருகேசன், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.பி.கே.பாலன், பொருளாளர் ஏ.குப்புசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ்.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   செயலர் ப.சந்தணராஜ் நன்றி கூறினார்.

More from the section

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வீடுகள் சேதம்
கஜா புயல்: தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் நாகை பயணம்
திருச்செந்தூர் பகுதியில் மின் முறைகேடு: ரூ. 36,000 அபராதம் வசூல்
சாத்தான்குளம் விவசாயிகளின் நவ.19 உண்ணாவிரதம் ரத்து: சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு
தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளி சாவு