சனிக்கிழமை 17 நவம்பர் 2018

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 08:08 AM

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கல்யாணராமன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் சுதாகர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் முத்துப்பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் விவசாய கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ரூ. 2 லட்சம் வரை கடன் வழங்க அனுமதிக்கவேண்டும். விவசாய கடன்களுக்கு உரம் வழங்கிட மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துதலை கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் தற்போது வழங்கப்படும். ரூ. 5 ஆயிரம், சிறு வணிக கடனை ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்,  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஜேசுராஜன், ஜெயபிரகாஷ், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், பால்ராஜ், செல்லத்துரை, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சகாய திலகராஜ், கிருஷ்ணன், சுவாமிதாஸ் மற்றும் அனைத்து சங்கச் செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் ஜவஹர் நன்றி கூறினார்.
 

More from the section

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வீடுகள் சேதம்
கஜா புயல்: தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் நாகை பயணம்
திருச்செந்தூர் பகுதியில் மின் முறைகேடு: ரூ. 36,000 அபராதம் வசூல்
சாத்தான்குளம் விவசாயிகளின் நவ.19 உண்ணாவிரதம் ரத்து: சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு
தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளி சாவு