திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் புதிய தடுப்பணைகள்: ஆட்சியர்

DIN | Published: 11th September 2018 08:09 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
 இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் உப்பாற்றில் ரூ. 4 கோடியில் ஆவுடையம்மாள்புரம், சிதம்பரம்பட்டி, சாவல்பேரி ஆகிய இடங்களிலும், வேம்பாறு ஆற்றில் விளாத்திக்குளம் பெரியசாமிபுரம், வேம்பார் ஆகிய இடங்களில் ரூ. 19 கோடி என மொத்தம் 5 இடங்களில் ரூ. 23 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. அடுத்தமாதம் ஒப்பந்தம் விடும் பணி தொடங்கும்.
 தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் 3 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தீர்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்றார் அவர்.
 

More from the section

சூரன்குடி அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
மாநில கால்பந்து: விருதுநகர் மாவட்ட அணி முதலிடம்
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்
காயல்பட்டினத்தில் எஸ்டிபிஐ விழிப்புணர்வுப் பேரணி
எள்ளுவிளையில் அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை