செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

விபத்தில் இளைஞர் சாவு

DIN | Published: 11th September 2018 08:09 AM

திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர்  உயிரிழந்தார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள இராணிமகராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்  மகன் சிவராஜகுமார் (35). இவர் திருச்செந்தூர் பந்தல் மண்டபத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கோயில்விளை பகுதியில் வரும் போது எதிரே வந்த வாகனம் சிவராஜகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்து,   உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அதிகாலை ரோந்து வந்த ஊர்க்காவல் படையினர்  ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  முதலுதவி சிகிச்சைக்குப்பின், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர்  ஞாயிற்றுக்கிழமை இரவு  உயிரிழந்தார். விபத்துகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் தி.ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

More from the section

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை