18 நவம்பர் 2018

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர் மரியாதை

DIN | Published: 12th September 2018 09:22 AM

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இம்மானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இதில்,  மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூரியராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரக்கண்ணன், கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமையில்,  மாநில துணைப் பொதுச்செயலர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில்,  வடக்கு மாவட்டச் செயலர் பாஸ்கர், நாம் தமிழர் கட்சியினர் கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை செயலர் பாலசுப்பிரமணியன்,  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பாரத்குமார்,  வடக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் காளீஸ்வரன்,   தமாகா இளைஞரணி மாவட்டத் தலைவர் கனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

More from the section

"மக்கள் நீதிக் கொற்றம்' - புதிய அமைப்பு தொடக்கம்
கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்


வனவர் பணி: தூத்துக்குடியில் இலவச மாதிரி தேர்வு

பயன்படுத்தாத நிலையில் உள்ள இலவச வீடுகளை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை:  ஆட்சியர்
தூத்துக்குடியில் சர்வதேச பயிலரங்கம்