திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN | Published: 12th September 2018 09:23 AM

திமுக தலைவர் மு.கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்து, அதிர்ச்சியில் இறந்த சாத்தான்குளம் தொழிலாளியின் குடும்பத்துக்கு திமுக சார்பில்  ரூ. 2 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்  அருகே உள்ள  கடாட்சபுரத்தைச் சேர்ந்தவர்  திமுக தொண்டர் எட்வின்தனராஜ்.  கருணாநிதியின்  இறந்த செய்தியை கேட்ட அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.  அவருக்கு,  திமுக தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 
இந்த நிதியை  எட்வின்தனராஜ் மனைவி அமுதாஷீலாவிடம்  தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சத்துக்கான  காசோலையை தூத்துக்குடி தெற்கு  மாவட்ட திமுக செயலர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ  செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,  ஒன்றிய திமுக செயலர்கள் சாத்தான்குளம்  ஆ.செ. ஜோசப் உடன்குடி பாலசிங் , சாத்தான்குளம் நகரச்செயலர்  மகா. இளங்கோ,  வழக்குரைஞர் கிருபா,  மாவட்டஇளைஞரணி துணைஅமைப்பாளர் ராமஜெயம், நெசவாளர்அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு மாவட்டப்பிரதிநிதி லெ.சரவணன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

More from the section

ஸ்டெர்லைட் விவகாரம்: பொதுமக்களிடம் இன்று கருத்துக் கேட்பு
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
இலுப்பையூரணி பெருமாள் கோயிலில் புதிய சகடை வாகன வெள்ளோட்டம்
முக்காணி தாமிரவருணி ஆற்றில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீவைகுண்டத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்