புதன்கிழமை 14 நவம்பர் 2018

எட்டயபுரத்தில் ஸ்கேட்டிங் மூலம் தலைக்கவசம் விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN | Published: 12th September 2018 09:26 AM

பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் பாரதி நினைவு தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரசார ஊர்வலம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.
பாரதி அன்பர் எஸ்.பி.எம். ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றச் செயலர் மு. பரமானந்தம்,  பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பிரசார ஊர்வலமானது பாரதி பிறந்த இல்லம் முன்பிருந்து தொடங்கி, எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பாரதி நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது தலைக்கவசம் அணிதல், மரக்கன்றுகள் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங்  செய்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 
நிகழ்ச்சியில் பாரதி இல்லக் காப்பாளர் செ. மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, டிரஸ்ட் நிர்வாகிகள் கதிரேசன், ஹேமலதா, பயிற்சியாளர்கள் சித்ரா, பாண்டி மீனா, துர்கா, அசோக்குமார், மதீஷ்குமார் மாணவ, மாணவியர் விஷ்னு, சூர்ய பிரகாஷ், கீதாஸ்ரீ,  சைலேஷ், நிக்லேஷ், பூர்வீகா, ஜெயசக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

கோவில்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக ஹாக்கி அணிக்கு லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள் தேர்வு


ஆவின் அலுவலகத்தில் ரூ. 10 கோடியில்  உள்கட்டமைப்புகள்: ஆவின் தலைவர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்