திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

சட்டவிரோதமாக மது விற்பனை: தொழிலாளி கைது

DIN | Published: 12th September 2018 09:23 AM

கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளத்தில் சட்டவிரோதமாக மது விற்ற தொழிலாளியை கைது செய்த போலீஸார்,  அவரிடமிருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கொப்பம்பட்டி காவல்  உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜா, அந்தோணிதிலீப் மற்றும் போலீஸார்  செவ்வாய்க்கிழமை முடுக்கலாங்குளம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  
அப்போது அதே பகுதியிலுள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து  விசாரித்தனர்.  அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் கூலித் தொழிலாளி வெள்ளைப்பாண்டி(42) என்பதும்,  சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்,  அவரிடமிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.500-ஐயும் பறிமுதல் செய்தனர்.
 

More from the section

சூரன்குடி அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
மாநில கால்பந்து: விருதுநகர் மாவட்ட அணி முதலிடம்
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்
எள்ளுவிளையில் அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை
புதூர் அருகே நீரில் மூழ்கி ஒருவர் சாவு